The Indian Times

கடைசி நேரத்தில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த தமிழக அரசு… ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் இரண்டுபெரும் தூண்கள் என்று சொன்னால் அது விஜய் மற்றும் அஜித் மட்டுமே.சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பிறகு இவர்கள் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.இவர்களுக்கு இடையே எந்த போட்டியோ பொறாமையோ இல்லை,ஆனால் இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இருவரது ரசிகர்களிடமும் உள்ளது.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகும் பொழுதே இப்படி என்றால் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பதை போல தற்போது பல ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் மோத உள்ளது

Advertisement

இதுவரை அஜித் விஜய் படங்கள் மோதியதில் அதிகம் விஜய் படம் தான் வெற்றிபெற்றுள்ளது.ஆனால் இந்த முறை இருவருமே தங்களது படத்தில் மிரட்டியுள்ளனர்.இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதன்படி அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் வருகிற 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.இந்நிலையில் இரண்டு படத்தின் ட்ரைலரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களால் பெரும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ரசிகர்களிடம் இரண்டு ட்ரைலரும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது,அதன்படி அஜித்தின் துணிவு முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கும் , விஜயின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் 13, 14, 15 மற்றும் 16ம் தேதி இரண்டு படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது சிறப்பு காட்சிகள் ரத்தாகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in