The Indian Times

EXPECT பண்ணுன அளவு இல்லை.. எதுக்குதான் காசு கொடுத்து வந்தேன்னு தெரியலை – துணிவு PUBLIC REVIEW

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.

Advertisement

நேர்கொண்ட பார்வை,வலிமை படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.தமிழகத்தில் அதிகாலை 1 மணி முதல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.அஜித் ரசிகர்கள் பட வெளியீட்டை திரையரங்குகளில் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் படம் குறித்து கேட்ட பொழுது கூறியதாவது,படம் நல்லா இருக்கு,முதல் பாதி மங்காத்தா மாதிரி சூப்பரா இருக்கு என கூறியுள்ளனர்.மேலும் சிலர் படத்தில் அஜித் சார் நல்லா பண்ணிருக்காரு ஆனா வினோத் சொதப்பிட்டாரு,எதிர்பார்த்த அளவு இல்லை,எதுக்கு காசு கொடுத்து வந்தேன்னு தெரியலை.எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க இருந்தாலும் வினோத் சார் படம் மாதிரி இருந்திருக்கலாம்,ஏதோ ஒன்று குறையுது என கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in