The Indian Times

மத்தவனை மட்டம் தட்டி மேல வந்து NO USE – துணிவு படத்தின் PROMO 2 வெளியாகியது

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.போனி கபூர் இப்படத்தினை தயாரித்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ஆவலாக காத்துக்கிடக்கின்றனர்.

Advertisement

அதிகாலை 1 மணிக்கெல்லாம் படத்தின் காட்சிகள் திரையிடப்பட உள்ளது.மேலும் விஜயின் வாரிசு படமும் நாளை ஒரே நாளில் வெளியாக உள்ளதால் எந்தப்படம் வெற்றிபெறும் பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உருவாகியுள்ளது.தற்போது இப்படத்தின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது படக்குழு.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://twitter.com/BoneyKapoor/status/1612681484405727232

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in