The Indian Times

HATERS-க்கு தரமான பதிலடி கொடுத்த CWC சிவாங்கி…இப்படி MASS பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லையே

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.

Advertisement

இவருக்கு எந்த அளவுக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அந்தளவிற்கு எதிர்ப்பாளர்களும் உள்ளனர்.இவரை பிடிக்காத சிலர் தொடர்ந்து இவர் குறித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.அண்மையில் கூட இவரை கேலி செய்து வெளியிட்ட மீம்ஸ்க்கு தக்க பதிலடியை தனது ட்வீட்டர் பக்கத்தில் கொடுத்திருந்தார்.இந்நிலையில் இன்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ரசிகர் ,உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி வதந்தி கிளப்புபவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,அவர்களை அமைதியாக்க முடியாதா என கேள்வி கேட்டிருந்தார்,அதற்கு பதிலளித்த சிவாங்கி,கூறியதாவது,பிறரை அமைதி படுத்த எனக்கு எந்த உரிமையும் கிடையாது,பாசிட்டிவ்,புரளிகள் ,எதிர்ப்புகள் எல்லாம் தொடர்ந்து நிலையாக இருந்து கொண்டு தான் இருக்கும் நான் குருட்டுத்தனமா எதிர்க்கிறவங்கள ஊக்கப்படுத்தமாட்டேன்,அப்படியே சிரிச்சி விட்ருவோம் என சூப்பர் ஆக பதிலளித்துள்ளார்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in