The Indian Times

MASTER-ஐ கீழே தள்ளிய விக்ரம்…உலகநாயகன் தற்போது உச்சநாயகனாக….

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.திரையரங்கில் 25 நாட்களை தாண்டியும் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு வருகிறது.

Advertisement

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Advertisement

தற்போது விக்ரம் புதிய சாதனையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி தளபதி விஜயின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய மாஸ்டர் படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்றது,அதேபோல் வசூலையும் வாரிக்குவித்தது.தமிழகத்தில் அதிக ஷேர் எடுத்தப்படம் என்று முதல் இடத்தில் மாஸ்டர் படம் இருந்தது தற்போது அந்த சாதனையை உலகநாயகன் முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவரை உறுதிசெய்யப்படாத நிலையில் படக்குழு இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in