The Indian Times

தளபதி விஜயுடன் நடனமாடிய நடிகை ஷகீலா தங்கை..ஆனால் தற்போது அவர் உயிரோட இல்லை..வருத்தமடைந்த ஷகீலா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சினிமாவிற்கு இவர் ப்ளே கேள்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் 110 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தமிழில் இவை நடித்த ஜெயம் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இவருக்கு பல ரசிகர்கள் இன்று வரை உள்ளனர்.

Advertisement

ஆபாச பட நடிகை என்று இருந்த இவரின் பெயரை அம்மா என புனிதமாக மாற்றிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி.குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் சகீலாவிற்கு போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றார்.மேலும் நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள் இவரை அம்மா அம்மா என கூறி தமிழ்நாடு முழுவதும் சகீலாவிற்கு அம்மா பெயர் கிடைத்தது.மேலும் ஷகீலா பல திருநங்கைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.சீசன் இரண்டில் போட்டியாளராக களம் இறங்கி சமைத்து அனைவரையும் அசத்தினார்.நடுவர்களையே தனது சமயலால் ஆச்சாரியப்பட வைத்தார்.அந்தளவிற்கு சமையலில் கைதேர்ந்தவர் இவர்

Advertisement
shakeela sister sheethal

இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செலிப்ரேஷன் சுற்றில் கலந்துகொண்டுள்ளார் ஷகீலா.இந்த சுற்றில் ஷகீலா தனது தங்கை குறித்து முதல் முறையாக பேசி கவலை அடைந்துள்ளார்.இவரது உடன்பிறந்த தங்கை பெயர் ஷீத்தல்.இவர் நடிகர் விஜயின் பிரபல பாடல்களில் ஒன்றான ஓ பாரி பாணி பூரி பம்பாய் காரி நீ தான் எந்தன் நகுமா நகுமா என்ற பாடலுக்கு தளபதி விஜயுடன் பாடலில் நடனமாடியுள்ளார்.ஆனால் இவர்23 வயதில் இறந்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த சீசனில் கோமாளியாக களம் இறங்கி இருக்கும் ஷீத்தலுக்கும் அதே பெயர் என்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.இவரின் இந்த சோக கதை ரசிகர்களின் நெஞ்சை உருக்கிவிட்டது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in