The Indian Times

இது ஒரு மெகா சீரியல்…மாமனிதன் படத்தினை வச்சி செய்த BLUESATTAI மாறன்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மாமனிதன்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.யுவன் சங்கர் ராஜா இப்படத்தினை தயாரித்துள்ளார்.இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.தமிழகத்தில் ஆர்கே சுரேஷ் இப்படத்தினை வெளியிட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் பார்த்து வெளியே வரும் பலரும் இப்படத்தினை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படம் வெளியாகியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் சீனு ராமசாமி என்று கூறினாலே நினைவுக்கு வருவது தர்மதுரை படம் தான்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.சீனு ராமசாமி.தமிழ் சினிமாவில் மொத்தமே 7 படங்கள் இயக்கி உள்ளார் இருப்பினும் இவரது 7 படங்களும் 70 படங்களுக்கு நிகரான வரவேற்பினை பெற்றுள்ளதால் இவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.7 படத்தில் 3 படம் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கியுள்ளார்.அதில் மாமனிதனும் உட்பட.நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதினை கையில் பிடித்தார் சீனு ராமசாமி.

Advertisement

தற்போது இப்படத்தினை விமர்சனம் செய்து ப்ளூசட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்,அதில் அவர் கூறியதாவது .படமே 2 மணி நேரம் தான் ஓடுது,அதுல பாதி வாசி ஹீரோ ஹீரோயினை எப்படி லவ் பன்றாருன்னு தான் காட்டுறாங்க,ஆனா கதை அது கிடையாது, ஹீரோ எப்படி ஏமாறினார்,குடும்பத்தை விட்டு ஓடிய பிறகு என்னாச்சு என்பது தான் கதை.படத்தில் இவரால் இடம்வாங்கி மக்கள் ஏமார்ந்து விட்டார்கள் என்று வாயால் தான் சொல்லுகிறார்களே தவிர எந்த பில்டப் சீனும் வரவில்லை,வீட்டினை விட்டு ஓடியவர் எப்படி கஷ்டப்படுவார்கள் என்று காண்பிக்க வேண்டும் அதற்கு பதிலாக அவர் கேரளா சென்று வேலை தேடி பாத்ரூம் கழுவுகிறார்.கதை வித்தியாசமான கதை அதற்கான மேக்கிங்கு இவர்கள் எந்த மெனக்கெடல் கொடுக்கவில்லை .இது ஒரு மெகா சீரியலை பெரியத்திரையில் பார்ப்பது போல் உள்ளது என விமர்சனம் தெரிவித்துள்ளார்

Embed video credits : Tamil talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in