The Indian Times

செல்லம் மாமா Romantic-ஆ பாக்குறனா….காதலியுடன் புகைப்படம் எடுத்து VIJAYTV புகழ்

சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.வாய்ப்பு கிடைத்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

இவருக்கு தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்து காமெடியனாக நடித்து வருகிறார்.மேலும் ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வந்ததாக அண்மையில் அறிவித்தார்.தற்போது அவருடன் புகழ் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் எப்போ திருமணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.விரைவில் இருவரும் திருமணமும் செய்ய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in