The Indian Times

EXCELLENT!!! மாமனிதன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய SUPERSTAR ரஜினிகாந்த்

இயக்குனர் சீனு ராமசாமி என்று கூறினாலே நினைவுக்கு வருவது தர்மதுரை படம் தான்.இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை இயக்குனராக பெற்றவர் இவர்.விஜய் சேதுபதி இப்படத்தில் தனது எதிர்த்தமான நடிப்பினால் அசத்தி இருப்பார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி.தமிழ் சினிமாவில் மொத்தமே 7 படங்கள் இயக்கி உள்ளார் இருப்பினும் இவரது 7 படங்களும் 70 படங்களுக்கு நிகரான வரவேற்பினை பெற்றுள்ளதால் இவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.7 படத்தில் 3 படம் விஜய் சேதுபதியை வைத்து தான் இயக்கியுள்ளார்.இவர் நடிகர் பரத்தினை வைத்து கூடல் நகர் என்ற படத்தினை இயக்கி சினிமாவில் இயக்குனராக 2007 ஆம் ஆண்டு கால் தடம் பதித்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதினை கையில் பிடித்தார் சீனு ராமசாமி.

Advertisement

மண் மனம் மாறாமல் படத்தினை இயக்குவதால் இவர் படங்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு உள்ளது.நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தினை கொடுத்ததே சீனு ராமசாமி தான்.கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே,மாமனிதன் என 7 படங்களை மட்டுமே இவர் தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்.இப்படத்திற்க்கு பிறகு ஜிவி பிரகாஷ் குமாரை வைத்து இடிமுழக்கம் படம் இயக்கி வருகிற.தற்போது மாமனிதன் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்தினை தயாரித்துள்ளார்.ஆர்கே சுரேஷ் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டு உள்ளார்.

Advertisement

இப்படம் தமிழகத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை போனில் தொடர்பு கொண்டு படம் நல்லா இருக்கிறது என பாராட்டியுள்ளார்.தமிழ் சினிமாவில் தரமான படம் வெளியாகினால் அதனை முதலில் பாராட்டுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.இந்த பாராட்டுக்கு நன்றி கூறி ஆர்.கே.சுரேஷ் தனது பக்கத்தில் சூப்பர் ஸ்டாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அண்மையில் டான் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in