The Indian Times

இது ஹன்சிகாவா இல்லை குஷ்புவா…அடையாளம் தெரியாமல் இளமையாக மாறிய குஷ்பு

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து சினிமா உலகை ஆட்டிப்படைத்தார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.

Advertisement

அண்மையில் உடல் எடையுடன் காணப்பட்ட நடிகை குஷ்பு கடினமான முயற்சியினால் உடற்பயிற்சி செய்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகை குஷ்புவிற்கு மட்டுமே ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.இதுவே இவருக்கு பெரும் வெற்றிதான் தற்போது உடல் எடையை குறைத்து ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்,90களில் குஷ்பு எப்படி இருந்தாரோ தற்போது அதுபோலவே முற்றிலுமாக மாறி அசத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in