பாட்டு பாடி பிச்சி உதறும் மைனா நந்தினி மகன் துருவன்…சேட்டை புடிச்ச பையன் சார்.. | MYNA NANDHINI

நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நந்தினி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது. சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.சின்னத்திரை நடிகராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

பாட்டு பாடி பிச்சி உதறும் மைனா நந்தினி மகன் துருவன்...சேட்டை புடிச்ச பையன் சார்.. | MYNA NANDHINI 1

விளம்பரம்

பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து தொடர்ந்து அப்டேட் செய்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

பாட்டு பாடி பிச்சி உதறும் மைனா நந்தினி மகன் துருவன்...சேட்டை புடிச்ச பையன் சார்.. | MYNA NANDHINI 2

விளம்பரம்

தற்போது இவர் யூடியூபில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளத்து.இந்த வீடியோவில் மைனா மகன் துருவ் மைக்கில் பாடல் பாடி அதகளம் செய்துள்ளார்.இந்த வீடியோ காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.துருவை சுற்றி அனைவரும் அமர்ந்து தாங்கள் பாடுவதை போல பாட கூற,மற்றவர்களை போல துருவன் செய்வது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பலரும் துருவை பார்த்தாலே எங்களுக்கு சோகம் மறைந்து மகிழ்ச்சியாகிவிடுகிறது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

விளம்பரம்

Embed video credits : MYNA WINGS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment