படம் செம்ம மொக்க..காமெடி எதிர்பார்த்து வந்தோம் அதுவே இல்லை…| GULU GULU PUBLIC REVIEW

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டில் கடலுக்கடியில் எதிர்நீச்சல் சீரியல் நந்தினி கொண்டாட்டம்

படம் செம்ம மொக்க..காமெடி எதிர்பார்த்து வந்தோம் அதுவே இல்லை...| GULU GULU PUBLIC REVIEW 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் இயக்குனர் ரத்னா குமார் இயக்கத்தில் குளு குளு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் இன்று வெளியாகியுள்ளது.ரசிகர்கள் காலை முதல் சந்தானத்தின் காமெடிக்காக படத்தினை பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

படம் செம்ம மொக்க..காமெடி எதிர்பார்த்து வந்தோம் அதுவே இல்லை...| GULU GULU PUBLIC REVIEW 2

விளம்பரம்

படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் கூறுவதாவது,எதிர்பார்த்த அளவு இல்லை,காமெடியா இருக்குனு நம்பி வந்தோம் ரொம்ப மொக்கையா இருக்கு.இதில் காமெடி பெருசா இல்லை.பல காமெடி நடிகர்கள் உள்ளே இருக்கின்றனர்,ஆனால் படத்தில் காமெடி சுத்தமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் படம் வேஸ்ட் சுத்தமா நல்லா இல்லை என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் மேலும் சில ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மற்ற படங்களை போலவே இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Embed video credits : TN360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment