The Indian Times

ஹீரோவுக்கு துளியும் நடிப்பே வரல.. படம் மாதிரியே இல்லை…கடுமையாக தி லெஜெண்ட் படத்தினை விமர்சனம் செய்த BLUESATTAI மாறன்

சரவணா ஸ்டார் சரவணன் முதல் முறையாக நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் பெரும் எதிர்பார்ப்பினை மக்களிடம் கிளப்பியுள்ளது.இதனால் படத்தினை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.அதன்படி இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ரசிகர்களிடம் பெரும் கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.மேலும் பலர் சரவணனை இகழ்ந்து வருகிறார்கள்,படம் நன்றாக இல்லை,கதாநாயகன் முக அமைப்பே இல்லை என கடுமையாக படத்தினை விமர்சித்து வருகின்றனர்.தற்போது ஒரு புதிய படம் வெளியாகினால் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தினை தான் ,தற்போது அவர் லெஜெண்ட் படம் குறித்து விமர்சனம் செய்து தங்களது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்

Advertisement

இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,படம் கதை நகரவே இல்லை,படம் முழுக்க ஹீரோ மட்டும் தான் வராரு,அவரை ரசிக்க முடியல காரணம் அவருக்கு துளியும் நடிப்பு வரல,கோவப்படுறது,சந்தோசப்படுறது என எல்லாத்துக்கும் ஒரே ரியாக்சன் தான் கொடுக்குறாரு,,படம் முழுக்க ரோபோ மாதிரி வராரு,அடுத்த சீன் என்ன வருதுன்னு ஈஸியா கண்டுபிடிக்கலாம்,படத்தை விளம்பரம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க,இது படம் மாதிரியே இல்லை.படத்துக்குள்ள எதுவும் இல்லை,அவரு கடை விளம்பரம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க என தனது ஸ்டைலில் பயங்கரமாக கலாய்த்துள்ளார்,

Embed video credits : TAMIL TALKIES 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in