The Indian Times

நடிகையுடன் இசையமைப்பாளர் அனிருத் கல்யாணமா?வெளியான உண்மை தகவல்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது முன்னாள் கணவர் தனுஷை வைத்து இயக்கிய படம் தான் 3.இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் அனிருத் ரவிச்சந்தர்.இப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பினை பெற்றது.தனது முதல் படத்திலேயே இசையமைப்பாளராக பிரபலம் அடைந்தார் அனிருத்.தனது கடின உழைப்பினால் சினிமாவில் அடுத்தடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தார்.

Advertisement

இந்த வெற்றியினை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி  இசையமைப்பாளராக உருமாறினார்.தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.ரஜினி,கமல்,அஜித்,விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துவிட்டார்.இனி வருங்காலத்தில் சினிமாவில் இசை என்றாலே அனிருத் என்று முடிவாகி விடும் போல் அந்த அளவிற்கு அனிருத் தமிழ் சினிமாவில் இசையில் பங்காற்றி வருகிறார்.தனது இசை மற்றும் தீம் ம்யூசிக்கினால் ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் அனிருத்.அண்மையில் இவர் இசையில் உருவாகிய அரபிக்குத்து பாடல் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement

அனிருத் திருமணம் எப்பொழுது என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷினை கல்யாணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியது.ஆனால் தற்போது இது உண்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பெண் பார்க்கப்பட்டு வருவதாகவும்,பெண் சினிமா துறையினை சேர்ந்தவர் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in