The Indian Times

செம்ம TWIST உடன் வெளியாகிய வாத்தி DELETED SCENES….

நடிகர் தனுஷ் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,ஆங்கிலம் என பல மொழி சினிமாவிலும் கலக்கி வருபவர். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது,அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனக்கென்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.கோலிவுட்டில் ஆரம்பித்து ஹாலிவுட் வரை இவரது கொடி பறக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் தனுஷின் கடின உழைப்பு தான்.ஒரே நேரத்தில் அனைத்து மொழி சினிமாவிலும் கலக்கி வருகிறார் தனுஷ் என்று கூறினால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்திற்க்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.நல்ல கருத்துக்களை படம் கூறியுள்ளதாக கூறி ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தினை கண்டு வருகின்றனர்.தனுஷ் நடித்த படங்களிலேயே மிக குறுகிய நாட்களில் 100 கோடி வசூல் செய்த படம் என்றால் அது வாத்தி படம் தான்.

Advertisement

இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் வீடியோ பாடல்கள் மற்றும் நீக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து படக்குழு வெளியிட்டு வருகிறது.தற்போது நீக்கப்பட்டுள்ள காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் தனுஷிடம் படித்த மாணவன் தான் அதிக மதிப்பெண் எடுத்ததற்கு காரணாம் சமுத்திரக்கனி அல்ல தனுஷ் என்று கூறுவது போல அமைந்துள்ளது,படத்தில் இந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.இந்த காட்சியை படத்தில் வைத்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in