The Indian Times

தல அஜித்தின் காதல் கோட்டை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?

.தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான்.

Advertisement

இதை தொறந்து அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்திற்காக தல ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். என்னதான் தல அஜித்திற்கு இன்று பல வெற்றி படங்கள் இருந்தாலும் ஆரம்பகாலத்தில் இவருக்கு அமைந்த மிக பெரிய ப்ளாக்பஸ்டர் திரைப்படம் காதல் கோட்டை. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தேவயாணி நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது விஜயின் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சு அரவிந் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் வேறுறொ படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகி இருந்ததால் இந்த படத்தில் தேவயானி நடித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in