The Indian Times

இத்து போன காலாவதியான மசாலா படம்..யானை படத்தினை படுமோசமாக விமர்சனம் செய்துள்ள BLUESATTAI MARAN

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.தற்போது இவர் அருண் விஜயை வைத்து யானை படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ராதிகா,சமுத்திரக்கனி,சஞ்சீவ் ,அம்மு அபிராமி, போஸ் வெங்கட் யோகிபாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Advertisement

தற்போது இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் அவர் படத்தினை படுமோசமாக ரிவியூ செய்துள்ளார்.இது ஹரி சினிமேட்டிக் யுனிவர்ஸ்ன்னு சொல்லலாம்,இவருடைய படத்துல எல்லா கேரக்டருக்கும் முந்தய படத்துல உள்ளது எல்லாம் வந்து போகுது,ஹரி படத்துல டாடா சுமோ வந்துட்டே இருக்கும்,ஆனா இந்த படத்துல இல்ல ஒருவேளை யானை 2 ல இருக்குமோ என்னமோ,இந்த படத்துல உள்ள பல காட்சிகள் இவரது பூஜை,சாமி 2 படங்களில் உள்ளது போல் தான் உள்ளது,காதலுக்கு மரியாதையை படத்தையும் உள்ளே கொண்டு வந்துருக்காங்க மொத்தத்துல இது இத்து போன காலாவதியான மசாலா என கூறி விமர்சனம் செய்துள்ளார்

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in