இளையராஜா குரலில் விடுதலை படத்தின் “காட்டு மல்லி” பாடல் வெளியாகியது…

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

இளையராஜா குரலில் விடுதலை படத்தின் "காட்டு மல்லி" பாடல் வெளியாகியது... 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,அன்றுமுதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.தனது கடின முயற்சியினால் தற்போது முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகர் சூரி.பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சூரி நடித்து அசத்தி விட்டார்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

இளையராஜா குரலில் விடுதலை படத்தின் "காட்டு மல்லி" பாடல் வெளியாகியது... 2

விளம்பரம்

விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்,அண்மையில் இப்படத்தில் இருந்து தனுஷ் குரலில் வெளியாகிய ஒன்னோட நடந்தா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது நேற்று இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.நீண்ட நாளுக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் இப்படத்தில் முக்கிய தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.தற்போது இப்படத்தில் இப்படம்பெற்ற காட்டு மல்லி பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடலை இளையராஜாவே பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகா உடன் அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் சூர்யா

விளம்பரம்

Embed video credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment