The Indian Times

தன்னை தானே செதுக்கியவன்… வெறித்தனமான LOOK-ல் தல அஜித்…. வைரலாகும் புகைப்படம்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது.

Advertisement

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது,இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,.தற்போது அடுத்தப்படத்திற்காக அஜித் வெறித்தனமான லுக்கில் மாறியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அஜித் வெறித்தனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in