The Indian Times

காஜல் அகர்வாலின் கலகலப்பான நடிப்பில் HORRER திரைப்படம் ஆன GHOSTY ட்ரைலர் இதோ

Kyun! Ho Gaya Na. என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் காஜல் அகர்வால்.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வந்தார்.லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் தனது கால் தடத்தினை பதித்தார் காஜல்.இப்படத்தினை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் வரிசையாக நடித்தார்.தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த பொழுது வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தில் வாய்ப்பு கிடைத்தது,சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என சிறிய தோற்றத்தில் நடித்து அறிமுகமாகினார்.அதன்பின்னர் மோதி விளையாடு படத்தின் மூலம் முழு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.இவர் பல படங்கள் தமிழில் நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்து நடித்து வந்தார்.தோல்வியை கண்டு துவண்டுவிடாத நடிகை காஜல் அகர்வாலுக்கு நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.அதன் மூலம் நான் மகான் அல்ல படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.இப்படத்திற்கு பிறகு இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் தனி கவனத்தினை பெபட தொடங்கினார்.இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் அமையவே தெலுங்கு சினிமாவை போல தமிழிலும் முன்னணி நடிகையாக கோலூன்றினார்.அதன்பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு துப்பாக்கி படத்தின் மூலம் காஜல் ஜோடியானார்.இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இத்தன்மையிலாம் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உருவெடுத்துவிட்டார்

Advertisement

இவருக்கு தமிழில் அடுத்ததாக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி படம் வெளியாக உள்ளது.வழக்கமான பேய் கதையில் காமெடியை சேர்த்து எடுத்துள்ளனர்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் யோகி பாபு,கே எஸ் ரவிக்குமார்,ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in