The Indian Times

அம்மாவை ஆசையாக விமானத்தில் அழைத்து சென்ற பாடகர் அந்தோணி தாசன்

தஞ்சை மாவட்டத்தினை சேர்ந்தவர் அந்தோணி தாசன்,இசை மீதுகொண்ட காதலால் அதனை கற்று கொண்டு நாட்டுப்புற பாடகராக உருவெடுத்தார்.பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வரவேண்டும் என குறிக்கோளுடன் உழைத்தார் அந்தோணி தாசன்,அதன்படி இவரது திறமைக்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வாய்ப்பு கிடைத்தது.இவர் முதல் முதலாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய சூது கவ்வும் படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலில் சில வரிகளை பாடி பட்டையை கிளப்பினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மேலும் அடுத்ததாக பாண்டிய நாடு,வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் பாடல்களை பாடி முன்னணி பாடகராக உருவெடுத்தார்,இவரது குரலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இவர் பாடிய பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.தற்போது இவர் தாயை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

Advertisement

இவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்ற அவரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பூமியிலிருந்து வானத்தை காட்டிய என் தாய்க்கு வானத்தில் இருந்து பூமியை காட்டிவிட்டேன் நன்றி என கூறியுள்ளார்.இவரின் இந்த பதிவில் ரசிகர்கள் இவரை வாழ்த்தி புகழ்ந்து வருகின்றனர்.ரசிகர்கள் வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in