The Indian Times

பாவாடை தாவணியில் நடனத்தில் வெளுத்தெடுத்த கயல் சீரியல் கதாநாயகி

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது சைத்ராவிற்காகத்தான் இருக்கும் அந்த அளவிற்கு இவர் நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட இவர் அதற்காக கன்னட சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நடித்தார்.பின்னர் அங்கிருந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்துவிட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கன்னடத்தினை விட தமிழக மக்கள் தான் இவருக்கு பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இதனை தொடர்ந்து மேலும் சின்னத்திரையில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது,அதுவும் கதாநாயகியாக, அதனை சரியாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக உருவெடுத்துள்ளார்

இவர் அடிக்கடி நடனம் ஆடி வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.அதன்படி சக நடிகர் உடன் பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சைத்ராவின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : Chaitra redyy

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in