The Indian Times

LOVE TODAY பட பாணியில் மகனை பங்கமாக கலாய்த்த ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.இவர் அண்மையில் நடித்த லவ் டுடே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

இப்படத்தில் ராதிகா மகன் அடிக்கடி செல்போன் நோண்டிக்கொண்டு இருப்பதை திட்டி கொண்டே இருப்பார்,தற்போது இவரும் இவரது மகனும் காரில் செல்லும்பொழுது தனது மகன் செல்போனை நோண்டிக்கொண்டிருப்பதை பார்த்து லவ் டுடே பட ஸ்டைலில் கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in