The Indian Times

மௌனராகம் சீரியல் பொண்ணா இது..சேலையில் தெறியாட்டம் போடுறாரே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.சீரியல்களில் நடிப்பது மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடனமாடி அசத்தி வருகிறார்.

Advertisement

தற்போது இவர் சேலையில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மௌனராகம் சீரியலில் நடித்த பொண்ணா இது என ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு நடனத்தில் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது இந்த வீடியோவை ரவீனா தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

Embed video credits : Raveena Daha

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in