The Indian Times

மேடையில் மரண ஆட்டம் போட்டு உலகநாயகனையே வியந்து பார்க்க வைத்த சாண்டி மாஸ்டர்

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி.ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார்.தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.விக்ரம் படத்தில் பத்தலை பத்தலை பாடலுக்கு இவர் சொல்லி கொடுத்த நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி அதே நடனத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் செய்து ஏராளாமானோர் வெளியிட்டு வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு சாண்டிக்கு தமிழ் சினிமாவில் கூடுதல் வரவேற்பு கிடைத்தது.பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த அலப்பறைக்கு அளவே இல்லை .தனது நகைச்சுவை திறமையால் போட்டியாளர்களிடம் மட்டும் நற்பெயரை பெறவில்லை மக்களிடமும் தான்.இறுதி வரை வந்து அவர் தான் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் முகேன் வெற்றி பெற்றது,இவரது ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றத்தினை அளித்தது என்று தான் கூறவேண்டும்.அந்த அளவிற்கு இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்

Advertisement

தற்போது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15வருட சினிமா பயணத்தினை கொண்டாடியுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன்,அனிருத்,சிவகார்த்திகேயன் போன்ற பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் பத்தலை பத்தலை பாடலுக்கு மேடையில் வெறியாட்டம் போட்டுள்ளார் சாண்டி.மேலும் நடனத்தினால் அனைவரையும் அசத்தியுள்ளார்.சாண்டி ஆடிய நடனத்தினை கண்டு உலகநாயகன் பிரம்மித்து பார்த்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in