The Indian Times

மறைந்த வடிவேல் பாலாஜி திருமண நாள்: பென்ஸியுடன் CWC புகழ் செய்த விஷயம்

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது..இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

Advertisement

இவருக்கு சில நாட்கள் முன்பு நீண்ட நாட்களாக இவர் காதலித்து வந்த பென்சி சென்ற பெண்ணுடன் ஹிந்து முறைப்படியும்,முஸ்லீம் முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த உடன் இவர் வடிவேல் பாலாஜியின் புகைப்படத்தினை மனைவியுடன் தொட்டு ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.மேலும் இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மாமா…உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்துல அடுத்த கட்டத்துல அடியெடுத்து வைக்கிறேன். உங்க ஆசிர்வாதம் எப்பவும் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்னு நம்பறேன்.எப்பவும் என் கூட தான் இருப்பீங்க, கண்டிப்பா நீங்க தான் எனக்கு மகனா வந்து பொறக்கணும்னு அந்த கடவுள வேண்டிக்கிறேன் மாமா என மனம் உருக பதிவிட்டுள்ளார்.இவரும் வடிவேல் பாலாஜியும் மிக நெருக்கமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.வடிவேல் பாலாஜி மறைந்த வீட்டுக்குள் புகழ் அழுது உருண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in