The Indian Times

இழுத்து ஓடும் தண்ணீரில் மிரட்டலாக BIKE ஒட்டி சென்ற தல அஜித்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு பைக் பயணங்களை முடித்துவிட்டு அஜித் குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை திரும்பியுள்ளார்.

Advertisement

கிடைக்கும் இடைவெளியில் பைக் பயணத்தினை நண்பர்களுடன் செய்து வருகிறார்.தற்போது படப்பிடிப்பில் இடைவெளி கிடைத்துள்ளதால் நண்பர்களுடன் பைக்கை எடுத்துக்கொண்டு லடாக் புறப்பட்டு விட்டார்.தல அஜித் லடாக் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.தற்போது லடாக்கில் அஜித் குமார் ஓடும் தண்ணீரில் சாதுரியமாக பைக் ஒட்டி சென்றுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அஜித் ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

https://www.youtube.com/watch?v=cuhdM-RmXjA&feature=youtu.be&ab_channel=KeepWatching

Embed video credits : KEEP WATCHING

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in