ஜிவி பிரகாஷ் இசையில் கார்த்தி குரலில் வெளியாகியது ஏறுமயிலேறி பாடல்… சர்தார் FIRST SINGLE

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.அமெரிக்கா சென்று படித்த நடிகர் கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் மதுரை ஆளாக நடித்து அந்த மொழிகளிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஜிவி பிரகாஷ் இசையில் கார்த்தி குரலில் வெளியாகியது ஏறுமயிலேறி பாடல்... சர்தார் FIRST SINGLE 1

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பெரும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் தொடர்நது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் கார்த்தி.அந்த வரிசையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்

ஜிவி பிரகாஷ் இசையில் கார்த்தி குரலில் வெளியாகியது ஏறுமயிலேறி பாடல்... சர்தார் FIRST SINGLE 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிகர் கார்த்தி ஜிவி இசையில் பாடிய ஏறுமயிலேறி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார்.இந்த பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பாடல் அருமையாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : Sony Music South

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment