The Indian Times

மன்மதன் படத்தை பெயரை மாத்தி எடுத்து வச்சிருக்காங்க… பஹீரா படத்தின் மக்கள் கருத்து

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் அமைரா டஸ்ட்டர்,ஜனனி அய்யர்,சாக்ஷி அகர்வால் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.கணேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை எகிற செய்திருந்தது,பிரபுதேவா சைக்கோ போல நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.இதனால் இப்படத்தினை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு களித்து வருகின்றனர்.

Advertisement

வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,காமெடி படத்தில் இல்லை அது கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது.பாட்டுக்கள் தேவை இல்லை.பிரபு தேவா நல்லா நடிச்சிருக்காரு.படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை,இன்னும் கொஞ்சம் நல்ல எடுத்திருக்கலாம் போல,த்ரில்லிங் ஆகவே இல்லை,அந்த இடத்துல காமெடி பண்ணி வச்சிருக்காங்க என முழுக்க நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

Embed video credits : SHRUTI TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in