The Indian Times

என்னது நான் குடிச்சிட்டு CWC வந்ததால் துரத்தி விட்டுட்டாங்களா? – கவலைப்பட்ட ஓட்டேரி சிவா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின்,மைம் கோபி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டு வாரம் முடிவடைந்துள்ளது. வழக்கம் போல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்

இந்த சீசனில் புதிய கோமாளியாக கலந்துகொண்டவர் தான் ஓட்டேரி சிவா,யூடியூபில் கொடுத்த பேட்டி ஒன்றில் வைரலாகியவர்,இவர் கோமாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ,ஆனால் இவர் இரண்டாவது வாரத்தில் வரவில்லை,இதனால் ஓட்டேரி சிவா குடித்து கொண்டு வந்ததால் அவரை நீக்கியாக இணையத்தில் செய்திகள் பரவியது,ஆனால் நிகழ்ச்சியில் ஓட்டேரி சிவா ஆபத்தான முறையில் சமைத்ததால் ஓட்டேரி சிவாவை கெஸ்ட் கோமாளியாக வைத்திருப்பதாக கூறினார்கள்,இதுகுறித்து ஓட்டேரி சிவாவிடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,நான் சாப்பாடு சாப்பிடுவேன்,குடிக்கலாம் மாட்டேன் பொறாமையில் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள்,குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்னை விரைவில் அழைப்பதாக கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in