The Indian Times

ஜெயிலில் இருந்து வரும் சித்ரா…. அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தும் சொந்தங்கள்… பாரதி கண்ணம்மா PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீரியலின் முடிவு சில ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் நெட்டிசன்கள் ,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மாவின் அடுத்த சீசன் ப்ரோமோவை கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடிக்க உள்ளார்,தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் கண்ணம்மாவை சித்ரா என கூறுகின்றனர்,சித்ரா முதல் கட்டத்திலேயே சிறையில் இருந்து வெளியே வருகிறார்,அவர் பேருந்தில் சொந்த ஊர் திரும்பும் பொழுது அவர் நகையை திருடிவிட்டதாக கூறி அசிங்கப்படுத்துகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,நாடகம் ஆரம்பத்திலேயே சூடுபிடிப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in