The Indian Times

எங்க அண்ணன் அசீம் நல்லவன்.. என்னை தப்பா தொடவே இல்லை – விக்ரமன் தான் ABUSER – தனலட்சுமி

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தான்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவற்றிற்கும் இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்று தான் கூறவேண்டும்.தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதிலும் பயங்கர ஆதரவு திரட்டி இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறது பிக் பாஸ்,தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் தான் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்,இது விக்ரமனின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தினை கொடுத்துள்ளது. அசீம் தனக்கு கிடைத்த 50 லட்சம் பணத்தில் பாதி 25 லட்சத்தினை பெற்றோர் இல்லாத மாணவர்களின் படிப்பு செலவுக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அசீம் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தனலக்ஷ்மியும் கலந்துகொண்டுள்ளார்.அப்பொழுது அசீம் உங்களை தொட்டுவிட்டார் என்று சண்டை போட்டீர்களே அதை பற்றி கூறுங்கள் என கேட்ட பொழுது அசீம் என்னை கோவத்தில் தான் பிடித்து தள்ளினார் தவிர எந்த தப்பான எண்ணத்திலும் தொடவில்லை,விக்ரமன் தான் டாஸ்கில் எனது காலை மடக்கி பிடித்து இழுத்தார்,அசீம் தவறானவர் என்றால் விக்ரமனும் தவறானவர் என கூறியுள்ளார்,இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது,இதனை பார்த்த ரசிகர்கள் ,நீங்கள் தானே பொம்மை டாஸ்கில் அவன் என்னை எங்க பிடிச்சு தள்ளுனான் தெரியுமா என சண்டை போட்டிங்க ,இப்போ இப்படி சொல்லுறீங்களே,விக்ரமன் தான் அப்பொழுது உங்களுக்கு ஆதரவு கொடுத்தார் ஆனால் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் என கழுவி ஊத்தி வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODS TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in