The Indian Times

TTF வாசன் உடன் BIKE RIDE செய்த மௌனராகம் சீரியல் ரவீனா.. என்ன SPEED-ஆ போனா இப்படி பயந்து கத்துறாங்க ரவீனா

இளைஞர்கள் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம் சிலர் சினிமா வரை சென்றுள்ளனர்.சிலர் நல்ல வழியில் சென்றாலும் சிலர் தவறான உதாரணமாக மாறிவிடுகிறார்கள் இங்கு தான் பிரச்னையே உருவாகிறது.முன்னதாக யூடியூபில் பப்ஜி விளையாடி ஆபாசமாக பேசிய மதன் கைது செய்யப்பட்டு பல நாட்கள் சிறையில் இருந்தார்.அவர் தற்போது சிறையில் இருந்து பல மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த்துள்ளார்.இந்நிலையில் தற்போது புதியதாக TTF வாசன் என்பவர் ஆபத்தான முறையில் பைக்குகளை ஒட்டி இளைஞர்களையும் ஆபத்தில் தள்ளுவதாக புகாரும் இவர் மீது எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

யூடியூபில் TTF வாசன் என்பவர் பைக் ட்ராவல் சேனல் வைத்துள்ளார்.பைக்கிலேயே இந்தியா முழுவதும் சுற்றி அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறார்.இவரின் யூடியூப் பக்கத்தினை சுமார் 26 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னையில் தனது ரசிகர்களை முதல் முறையாக வாசன் சந்திக்க வந்த பொழுது மிகப்பெரிய கூட்டமே கூடி போக்குவரத்து பாதித்ததால் போலீசார் அங்கு வந்து அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பினர்.அண்மையில் வாசன் பைக்கில் அதிகவேகமாக சென்றதாகவும் அதனால் விபத்துகள் நேரும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்

இந்நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான மௌனராகம் சீசன் 2வில் கதாநாயகியாக நடிப்பவர் தான் சக்தி என்கிற ரவீனா,இவர் வாசனை சந்தித்துள்ளார்.மேலும் வாசன் ரவீனாவிற்காக ஹெல்மெட் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.மேலும் ரவீனாவை தன்னுடன் பைக்கில் அழைத்து சென்றுள்ளார்,வாசன் செல்லும் வேகத்தினை பார்த்து பயந்து அலறியுள்ளார் ரவீனா.இந்த வீடியோவை வாசன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Embed video credits : TWIN THROTTLERS

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in