The Indian Times

விஜய், சீமான் கூட்டணியில் உருவாக இருந்த பகலவன் திரைப்படம் கைவிட இது தான் காரணம் !

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான்.

பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

Advertisement

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. விஜய் தன்னுடைய கெரியரில் பல இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார். அதேபோல் விஜய் மற்றும் சீமான் கூட்டணியில் உருவாகியிருந்த திரைப்படம் பகலவன். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்தது.

இந்த படம் ஏன் கைவிடப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை விஜயிடம் சீமான் சொன்னபோது , விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. ஒவ்வொரு சீனும் சூப்பராக இருக்கிறது என்று கூறிய விஜய் கிளைமாக்சை மற்றும் கொஞ்சம் மாற்றவேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சீமான் மீண்டும் விஜயை சந்தித்து வேறு கிளைமாக்ஸை கூறியுள்ளார். ஆனாலும் விஜயை அந்த கிளைமாக்ஸ் கவரவில்லை. இதனால் தான் இந்த திரைப்படம் கைவிடப்பட்டது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in