The Indian Times

தர்காவில் வழிபாடு செய்த தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்! Rare Video

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Advertisement

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதிலும் துப்பாக்கி , கத்தி ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களின் favourite. தற்போது விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் ஆகியோர் சேர்ந்து கடப்பாவில் உள்ள தர்காவில் வழிபாடு செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in