The Indian Times

ரவுடி கெட்டப்பில் மாஸான போஸ்ட்டரை வெளியிட்ட பிரேம்ஜி! அதுலயும் படத்தோட பேரு வேற லெவலா இருக்கு.

இயக்குனர் வெங்கட் பிரபு ஹீரோயின் இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தன்னுடைய தம்பி பிரேம்ஜி இல்லாமல் படத்தை எடுக்கவேமாட்டார் என்று பலர் கலாய்த்து கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு தான் இயக்கம் எல்லா படங்களிலும் பிரேம்ஜி க்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் வெங்கட் பிரபு. வல்லவன் படத்தில் சைடு ரோலில் நடித்த பிரேம்ஜி அனைவராலும் அறியப்பட்டது இந்த படத்தின் மூலம் தான்.

Advertisement

அதன் பிறகு சென்னை 28 , சத்யம் , கோவா , மங்காத்தா , சேட்டை என பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் இருதியாக நடித்த திரைப்படம் சிம்பா. இதை தாண்டி தற்போது str வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு திரைப்படத்திலும் நடித்துள்ளார் பிரேம்ஜி. இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த பிரேம்ஜி தற்போது புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.

Advertisement

தமிழ் ராக்கர்ஸ் என்ற புதிய படத்தில் நடிக்கிறார் பிரேம்ஜி. அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு coming soon என்ற ட்வீட் போட்டுள்ளார். இந்த போஸ்டரில் சிகரெட் பிடித்துக்கொண்டு , ஒரு கையில் பாட்டில் மாரு கையில் சைக்கிள் செயின் என்று பார்ப்பதற்கே ரவுடி போல் இருக்கிறார் பிரேம்ஜி. இந்த படத்தி பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். தற்போது பிரேம்ஜியின் புதிய கெட்டப்பில் வெளிவந்துள்ள இந்த படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in