The Indian Times

செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ள Biggboss பிரபலம் ரேஷ்மா! அதுவும் இந்த பிரபலமான நியூஸ் சேனல்ல.

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் செய்தி தொகுப்பாளராக இருந்து வெள்ளித்திரைக்கு சென்று புஷ்பா புருஷன் என்ற காமெடியை சொன்னாலே முதலில் ஞாபகம் வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. என்ன தான் இன்று பிரபலமான நடிகையாக இருந்தாலும் இந்த நிலைக்கு வருவபிதற்கு பல தடைகளை கடந்து தான் வந்திருக்கிறார் ரேஷ்மா.

Advertisement

இவர் முதலில் தெலுகு செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார் ரேஷ்மா. இதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் ரேஷ்மா. அதன் பிறகு வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கோ 2, மணல் கயிறு 2 , வணக்கம் டா மாப்ள ஆகிய படங்களில் நடித்துள்ளார் ரேஷ்மா.

Advertisement

அதிலும் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் இன்றுவரை பேமஸ் ஆக இருக்கின்றது. இதையும் தான் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே இன்னும் பிரபலமடைந்தார் ரேஷ்மா. இந்நிலையில் தற்போது இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in