எனக்கு Engagement ஆகிடுச்சே…பிரபல Youtuber parithabangal கோபிக்கு நிச்சயம்..வெளியான புகைப்படம்

சிவகங்கையை சேர்ந்த கோபி எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் இன்று சினிமாவிலும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்தும் சாதித்துள்ளார்.ஆரம்பத்தில் இவர் தனது நண்பர் சுதாகர் உடன் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த நிலையில் மூன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி சின்னத்திரைக்குள் நுழைந்தார்கள்.பின்னர் அங்கிருந்து மெட்ராஸ் சென்ட்ரல் என்ற யூடியூப் சேனலில் படங்களையும்,பிற நட்சத்திரங்களையும் கலாய்த்து மிக பிரபலமாகினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் மாமன்னன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

எனக்கு Engagement ஆகிடுச்சே...பிரபல Youtuber parithabangal கோபிக்கு நிச்சயம்..வெளியான புகைப்படம் 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி தற்போது சொந்தமாக பரிதாபங்கள் என்ற சேனல் தொடங்கி தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு அசத்தி வருகின்றனர்.இவர்களது சேனலில் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.இவர்களுக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கோபியும் சுதாகரும் நெருங்கிய நண்பர்கள்,இதில் சுதாகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது.திருமணம் முடிந்த பிறகும் தற்போது தொடர்ந்து தங்களது சேனல்களில் யூடியூப் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஐபிஎல் பார்க்க வந்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் இதோ

எனக்கு Engagement ஆகிடுச்சே...பிரபல Youtuber parithabangal கோபிக்கு நிச்சயம்..வெளியான புகைப்படம் 2

விளம்பரம்

இந்நிலையில் கோபிக்கு எப்போது திருமணம் நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் கேள்விகளை எழுப்பிவந்தனர்,அதற்கு எந்த பதிலும் சொல்லாத கோபி திடீரென பெண்ணை நிச்சயம் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.கோபி யமுனா என்கிற பெண் உடன் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.தற்போது நிச்சயத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment