Water bottle-ல கூட விளம்பரமா…அசத்துறீங்களே..| Vignesh sivan & Nayanthara Marriage

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சித்துவுடன் கடற்கரையில் ரொமென்ஸ் செய்யும் ஷ்ரேயா

Water bottle-ல கூட விளம்பரமா...அசத்துறீங்களே..| Vignesh sivan & Nayanthara Marriage 1

விளம்பரம்

அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் சென்று சுவாமி தரிசனம் செய்து புகைப்படத்தினை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.அன்று இவர்கள் வெளியிடும் புகைப்படம் தான் இணையத்தில் பெரிதும் பேசப்படும் விஷயம் ஆகும்.இவர்களின் கல்யாணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் தற்போது நாளை அவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக விக்னேஷ் சிவன் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

கட்டாயம் படிக்கவும்  பட்டு சேலையில் பட்டையை கிளப்பும் CWC சிவாங்கி

Water bottle-ல கூட விளம்பரமா...அசத்துறீங்களே..| Vignesh sivan & Nayanthara Marriage 2

விளம்பரம்

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நாளை இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறுகின்றது.மேலும் இந்த திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இவர்களது திருமணம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இவர்களது திருமண வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை வரும் விருந்தினர்களுக்கு கொடுக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் படம் பொருத்திய குடிதண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment