எனக்கு குழந்தை பிறந்திருக்கு.. ஆனா குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு நீங்க கடவுளிடம் வேண்டிக்கோங்க… ஆர்கே சுரேஷ்

இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக அறிமுகம் ஆகியவர் ஆர் கே சுரேஷ்.இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் சுரேஷுக்கு வர தொடங்கியது.அதன்படி மீண்டும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விஷாலின் மருது படத்தில் ரோலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கடற்கரையை சுத்தம் செய்த நடிகை ரெஜினா கேசன்ட்ரா

எனக்கு குழந்தை பிறந்திருக்கு.. ஆனா குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு நீங்க கடவுளிடம் வேண்டிக்கோங்க... ஆர்கே சுரேஷ் 1

விளம்பரம்

காண்பவர்களை கொலைநடுங்க செய்யும் வில்லனாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.பில்லா பாண்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்கு அறிமுகமாகினார்.மேலும் நடிப்பில் மட்டும் இல்லாமல் படங்களை தயாரித்தும் வருகிறார்.இவர் தயாரிப்பில் வெளியாகிய தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிப்பில் அடுத்ததாக காடுவெட்டி திரைப்படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் சென்று சூப்பர் ஸ்டாரை திருமணத்திற்கு அழைத்த நடிகை மேகா ஆகாஷ்

எனக்கு குழந்தை பிறந்திருக்கு.. ஆனா குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு நீங்க கடவுளிடம் வேண்டிக்கோங்க... ஆர்கே சுரேஷ் 2

விளம்பரம்

இப்படி தயாரிப்பு நடிப்பு என சினிமாவில் பெரும் பிசியாக இருந்து வருகிறார்.அண்மையில் இவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி இருப்பதாக அறிவித்து அவருக்கு வளைகாப்பு நடத்தினார்.தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.இதுகுறித்து ஆர்கே சுரேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது,எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது,ஆனால் குழந்தைக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருக்கிறது,அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.இந்த பதிவில் அவரது ரசிகர்கள் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment