The Indian Times

வாரிசு VS துணிவு – தமிழகத்தில் வசூலில் முன்னிலை யார் தெரியுமா… பட்டையை கிளப்பிய உச்ச நடிகர்

தமிழ் சினிமாவின் இரண்டுபெரும் தூண்கள் என்று சொன்னால் அது விஜய் மற்றும் அஜித் மட்டுமே.சூப்பர் ஸ்டார் உலகநாயகனுக்கு பிறகு இவர்கள் தான் ஆரோக்கியமான போட்டியாளர்களாக சினிமாவில் வலம் வருகின்றனர்.இவர்களுக்கு இடையே எந்த போட்டியோ பொறாமையோ இல்லை,ஆனால் இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இருவரது ரசிகர்களிடமும் உள்ளது.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகும் பொழுதே இப்படி என்றால் ஒரே நாளில் வெளியானால் என்னவாகும் என்பதை போல தற்போது பல ஆண்டுகள் கழித்து இருவரது படங்களும் மோதி உள்ளது

Advertisement

இதுவரை அஜித் விஜய் படங்கள் மோதியதில் அதிகம் விஜய் படம் தான் வெற்றிபெற்றுள்ளது.ஆனால் இந்த முறை இருவருமே தங்களது படத்தில் மிரட்டியுள்ளனர்.இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.அதன்படி அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படம் கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதுவரை வாரிசு உலகம் முழுவதும் 210கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.படம் வெளியாகிய நாட்களில் இருந்து தமிழகத்தில் வாரிசு வசூலை துணிவு முந்தி இருந்தது.

Advertisement

தற்போது இரண்டு படங்களும் தமிழகத்தில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி வாரிசு படம் தமிழகத்தில் மட்டும் ரூ.105 கோடி வசூல் செய்துள்ளது.துணிவு திரைப்படம் ஆனது ரூ.106 கோடி ரூபாய் வரை வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் படக்குழுக்கள் மொத்த வசூலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in