துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக அஜித் செய்த செயல் – துணிவு STUNT MASTER சுப்ரீம் சுந்தர் தகவல்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையே அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக அஜித் செய்த செயல் - துணிவு STUNT MASTER சுப்ரீம் சுந்தர் தகவல் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்,ஜிப்ரான் இசையமைத்துள்ளார் ,போனி கபூர் இப்படத்தினையும் தயாரித்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக அஜித் செய்த செயல் - துணிவு STUNT MASTER சுப்ரீம் சுந்தர் தகவல் 2

விளம்பரம்

இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் ஒருவர் லாரி மேல் இருந்து நடனமாடி கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்து உயிரிழந்தார்.இது பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் அளித்தது.இந்த செய்தியை கேட்டு அஜித் மிகவும் வருத்தப்பட்டாராம் மேலும் இதனால் தான் துணிவு வெற்றியை பெரிதாக கொண்டாடவில்லை என இப்படத்தின் சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகருக்காக அஜித் செய்த செயல் - துணிவு STUNT MASTER சுப்ரீம் சுந்தர் தகவல் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment