The Indian Times

மீண்டும் அசுரனாய் தனுஷ்.. துப்பாக்கியுடன் வேட்டைக்கு கிளம்பிய அசுரன்… வெறித்தனமாக வெளியாகிய கேப்டன் மில்லர் MAKING VIDEO

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது. தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாக உள்ளது.முதல் முறையாக தனுஷுக்கு இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் படம் இது ஆகும்.விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Advertisement

இதற்கு அடுத்து தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திர்ற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்,படத்திற்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது,இறுதியாக துப்பாக்கியுடன் கெத்தாக தனுஷ் நின்றுள்ளார்.இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : SATHYAJOTHI FILMS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in