தெலுங்கில் வசூலில் செம்ம அடி வாங்கிய வாரிசு… அட பாவமே மொத்த வசூல் இவ்வளவுதானா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பிரியாவுடன் விருது வழங்கும் விழா வந்த இயக்குனர் அட்லீ

தெலுங்கில் வசூலில் செம்ம அடி வாங்கிய வாரிசு... அட பாவமே மொத்த வசூல் இவ்வளவுதானா? 1

விளம்பரம்

தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.அதன்படி தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்துள்ளார்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.மேலும் சரத்குமார்,ஷாம்,பிரபு ,யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாரதி கண்ணம்மா வில்லி பரீனா மகனின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தெலுங்கில் வசூலில் செம்ம அடி வாங்கிய வாரிசு... அட பாவமே மொத்த வசூல் இவ்வளவுதானா? 2

விளம்பரம்

வெளியாகிய நாள் முதல் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.இதுவரை வசூலில் உலகம் முழுவதும் வாரிசு திரைப்படம் ஆனது 210 கோடிகளை பெற்றுள்ளதாக தமிழ்நாட்டு வெளியீட்டு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்திருந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு,இவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்,விஜய் படம் தெலுங்கில் பெரும் லாபம் தரும் என்பதால் இப்படத்தினை தயாரித்தார்.ஆனால் இப்படம் தெலுங்கில் வசூலில் செம்ம அடிவாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 12 கோடி வரை மட்டுமே தெலுங்கில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தற்போது வரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதற்கு காரணம் தெலுங்கில் வெளியாகிய பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி படம்தான் என காரணம் கூறப்படுகிறது.இப்படங்கள் வெளியாகாமல் இருந்திருந்தால் நிச்சயம் தளபதி விஜய் படம் தெலுங்கிலும் வசூலை குவித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment