The Indian Times

கேக் சாப்பிடுங்க வம்சி.. நம்ம ஜெயிச்சிட்டோம்… வாரிசு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தளபதி விஜய்…

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம்.இவர் நடிக்கும் படங்கள் தற்போது நூறு கோடிகளுக்கு மேல் தான் வசூல்களை செய்து வருகிறது.

Advertisement

இதனாலேயே தயாரிப்பாளர்கள் தளபதி விஜயை வைத்து படம் எடுக்க வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் வெளியாகி உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.தமன் இசையமைத்துள்ளார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுவரை உலகம் முழுவதும் இப்படம் 210 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Advertisement

இந்நிலையில் நேற்று தளபதி விஜய் படக்குழுவினரை அழைத்து கேக் வெட்டி வாரிசு வெற்றியை கொண்டாடியுள்ளார்.மேலும் நல்ல படம் கொடுத்துள்ளதாக இயக்குனர் வம்சிக்கு கேக் ஊட்டியும் மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.மேலும் புகைப்படத்தில் தளபதி விஜய் தனது அடுத்தப்படத்தின் கெட்டப்பில் உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஒரே நேரத்தில் இரண்டு லட்டு சாப்பிட்டுள்ளது போல மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் கெட்டப் வெறித்தனமாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in