குண்டர் சட்டம்.. ஒரு வருடம் ஜெயில்.. சிக்காவுடன் களி தின்ன போகும் ரவுடி பேபி சூரியா

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

திருப்பூரைச் சேர்ந்தவர் சுப்புலெட்சுமி. இவரை இப்படி சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால் ரவுடி பேபி சூர்யா என்று சொன்னால் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு இந்த பெயர் பிரபலம். டிக்டாக்கில் கவர்ச்சியாக நடனம் ஆடி அதன் மூலம் புகழ் பெற்றார். தனக்குத் தானே ரவுடி பேபி சூர்யா என்று பெயரை மாற்றிக் கொண்டு வலம் வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உண்டு. டிக்டாக்கில் இவர் செய்கைகள் பிடிக்காததால் அவரது கணவர் அவரை விவாகரத்து செய்து விட்டார். தனியாக வாழ்ந்து வந்த சூர்யா அடிக்கடி பல பிரச்சினைகளில் சிக்குவார். ஆனால் அவர் மீது பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.

கட்டாயம் படிக்கவும்
கேரளத்து பெண்குட்டி கல்யாணத்துல போட்ட குத்தாட்ட வீடியோ!

குண்டர் சட்டம்.. ஒரு வருடம் ஜெயில்.. சிக்காவுடன் களி தின்ன போகும் ரவுடி பேபி சூரியா 1

விளம்பரம்

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்பருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர். அதில் இருவரும் மிகவும் அருவருப்பாக பேசி சண்டை போடுவது போன்று வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். அதே போல் தனக்கு எதிரான போட்டியாளர்களை மோசமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்து வந்தனர். கோவையைச் சேர்ந்த தம்பதிகளைப் பற்றி இவர் பேசியது மிகுந்த சர்ச்சையானது. அவர்களின் குழந்தைகளைப் பற்றியும் மோசமாக பேசினர். மேலும் காவல்துறையால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று வாய் சவடால் விட்டனர்.

கட்டாயம் படிக்கவும்
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்! வைரல் வீடியோ

குண்டர் சட்டம்.. ஒரு வருடம் ஜெயில்.. சிக்காவுடன் களி தின்ன போகும் ரவுடி பேபி சூரியா 2

விளம்பரம்

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கோவையைச் பெண் கோவை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் சூர்யா மற்றும் சிக்காவை சிறையில் அடைத்தனர். தற்போது இவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் தமிழகம் முழுவதும் புகார் உள்ளதால் சைபர் கிரைம் வழக்கை மேற்கோள் காட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பரிந்துரை செய்து இவர்கள் இருவரையும் 1 வருடம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இவர்கள் இருவரும் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இணையத்தை தவறாக பயன்படுத்தும் ஒவ்வொருவர் மீதும் இவ்வாறு சட்டங்கள் தன் கடமையை செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயின் சிவராத்திரி நடனம் ! வைரல் வீடியோ உள்ளே.

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment