LOVE TODAY என் டைட்டில் ஒரு மரியாதைக்கு கூட என்ன நூறாவது நாள் விழாவில் அழைக்கவில்லை – கொந்தளித்த இயக்குனர் பால சேகரன்

இளைய தளபதி விஜயை வைத்து லவ் டுடே படத்தினை இயக்கி சினிமாவில் அறிமுகம் ஆகியவர் பால சேகரன்,இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் இவர்.முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார்.இப்படத்திற்கு பிறகு தமிழில் துள்ளி திரிந்த காலம் என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை,இதனால் தமிழில் இருந்து தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கு மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கி நல்ல வரவேற்பினை தெலுங்கு சினிமாவிலும் பெற்றார்.

LOVE TODAY என் டைட்டில் ஒரு மரியாதைக்கு கூட என்ன நூறாவது நாள் விழாவில் அழைக்கவில்லை - கொந்தளித்த இயக்குனர் பால சேகரன் 1

விளம்பரம்

இவர் பல படங்கள் இயக்கி இருந்தாலும் இன்று வரை பேசப்படுவது என்றால் லவ் டுடே படம் தான்.தற்போது இயக்குனரில் இருந்து நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் பிரதீப் ரங்கநாதன்,இவர் இயக்கி நடித்த லவ் டுடே படம் நல்ல வரவேற்பினை பெற்றது,படத்தில் இயக்குனர் பால சேகரனுக்கு நன்றியை தெரிவிக்கவில்லை,இதுகுறித்து நெட்டிசன்கள் வசை பாடிய பொழுது உடனே ட்வீட்டரில் இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றியை கூறி மன்னிப்பையும் கூறி பதிவிட்டுள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

LOVE TODAY என் டைட்டில் ஒரு மரியாதைக்கு கூட என்ன நூறாவது நாள் விழாவில் அழைக்கவில்லை - கொந்தளித்த இயக்குனர் பால சேகரன் 2

விளம்பரம்

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.இந்த விழாவிற்கு இயக்குனர் பாலசேகரனை அழைக்கவில்லை ,இதுகுறித்து தனது முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் பாலசேகரன் கூறியதாவது தாமதமான பதிவு… ஆனால் தாங்கமுடியாத பதிவு…லவ் டுடே 100த் டே சிறப்பாக கொண்டாடினார்கள்…யூ டூபில் கிளிப்பிங்ஸ் பார்த்தேன்…
என் டைட்டில்…ஒரு மரியாதைக்கு கூட கூப்பிடல ..நன்றி சொல்லல.. ஊரே திட்னது க் கப்புறம் ட்விட்டர் ல தேங்க்ஸ்…நல்லா வருவீங்க… சார்..
யாரோட டைட்டில்…யாரோ எடுத்து சம்பாதிக்கறானுக…நாம இன்னும் போராடிக்கிட்டு தான் இருக்கோம்..
இத்தன நாள் ஒரு சின்ன நம்பிக்கை… வருவாங்க.. வந்து பேசுவாங்கன்னு… ம் ம் ம் மனசு தங்கமுடியாம எழுதறேன்… என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

LOVE TODAY என் டைட்டில் ஒரு மரியாதைக்கு கூட என்ன நூறாவது நாள் விழாவில் அழைக்கவில்லை - கொந்தளித்த இயக்குனர் பால சேகரன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment