சீரியசான கதாநாயகனாக பிரேம்ஜி அமரன் கலக்கும் சத்திய சோதனை படத்தின் டீசர் இதோ

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

சீரியசான கதாநாயகனாக பிரேம்ஜி அமரன் கலக்கும் சத்திய சோதனை படத்தின் டீசர் இதோ 1

விளம்பரம்

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

சீரியசான கதாநாயகனாக பிரேம்ஜி அமரன் கலக்கும் சத்திய சோதனை படத்தின் டீசர் இதோ 2

விளம்பரம்

தற்போது பிரேம்ஜி கதையின் நாயகனாக சத்திய சோதனை படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.இசையமைப்பாளர் ரகுராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மாறுபட்ட தோற்றத்தில் பிரேம்ஜி அமரன் நடித்து ரசிகர்களை கவருவதை டீசரில் காண முடிகிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

விளம்பரம்

Embed video credits : MRT MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment