The Indian Times

படம் ரொம்ப சூப்பரா இருக்கு.. நல்ல சோஷியல் மெசேஜ் சொல்லிருக்காங்க.. மக்களின் பாராட்டு மழையில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மிர்ச்சி சிவா.இவர் முதல் முறையாக நடித்த படம் 12பி.இப்படத்தில் நடிகர் ஷியாமுக்கு நண்பனாக வந்திருப்பிபர்.இப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த சென்னை 600028 படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் இவருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது,இப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணியில் சரோஜா படத்தில் நடித்திருந்தார்.பின்னர் இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டை கொடுத்தார் தமிழ் சினிமாவில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.இவ்வாறு தனது படங்களின் மூலம் மக்களை மகிழ்வித்து வருகிறார் சிவா.இவருக்கு அடுத்ததாக பல படங்கள் வரிசையாக வெளியாக காத்திருக்கிறது.அதில் முதலாவதாக வெளியாக உள்ள படம் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் ஆகும்.இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இருக்கு,நிறைய சோசியல் மெசேஜ் காமெடியுடன் சேர்த்து சொல்லிருக்காங்க,ரொம்ப புதுசா இருக்கு என கூறி வருகின்றனர்.

Advertisement

மேலும் சிலர் சில இடங்களில் தொய்வு உள்ளது.போன் நினைத்தால் என்ன வேணாலும் நம்மளை பண்ணும் என்பதை காட்டியுள்ளார்கள்,மேகா ஆகாஷ் படத்தில் நல்ல நடித்துள்ளார்.படம் மெதுவாக நகர்ந்தாலும் காமெடி நல்லா இருக்கு.சிவா நல்ல நடித்துள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in