The Indian Times

STR 47 First Look Poster | Simbu | GVM | A.R.Rahman

சிம்பு தமிழ் ரசிகர்களால் எஸ்.டி.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர். தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான

Advertisement

உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் , எஸ்.ஜே சூர்யா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

சமீபத்தில் கூட இந்த படத்தின் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடித்துள்ள STR 47 படத்தின் பிரஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in